வெள்ளி, 1 ஜனவரி, 2010

ஆன்மா

இந்துத் தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆன்மா எனப்படுகிறது. ஆன்மா என்ற வடமொழிச் சொல்லின் வேர்ச்சொல்லான ‘ஆத்மன்’ ‘அன்’ (மூச்சுவிடு) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது. அத்வைத நூல்களோ ஆதி சங்கரர் வழித்தோன்றல்களோ ஆன்மாவைப் பற்றித் தரும் விளக்கங்கள் இங்கே கொடுக்கப் படுகின்றன.

நான் யார்

இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரத்தில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு ‘நான்’ ஆக முடியாது. முதல் காரணம் இது ‘என்’ உடம்பு என்கிறோம். ‘என்’ உடம்பு, ‘என்’ கண், ‘என்’ காது, ‘என்’ ருசி, ‘என்’ வாசனை – என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால் முதலிய புலனுறுப்புகளோ, ஓசை, பார்வை முதலிய உட்புலன்களோ, ஏன், எண்ணங்கள் தோன்றி மறைவதற்கு இருப்பிடமான மனதோ ‘நாம்’ இல்லை என்பதுதான். மனது தூங்கும்போதும் ‘நாம்’ இருக்கிறோம். அதனால் மனதோ புத்தியோ ‘நாம்’ இல்லை. ‘நான், நான்’ என்று மனது உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகின்றதென்றாலும், மனது இல்லாத போதுங்கூட நாம் இருந்துகொண்டு தானிருக்கிறோம். மனதை வைத்துத்தான் எல்லா எண்ணங்களும் உணர்வும் உண்டாகின்றன. மனது இல்லாதபோது நாம் செயலியலற்ற ஜடமாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் மனதையே ‘நாம்’ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ எப்படியோ உயிரோடு இருக்கச்செய்யும் உயிர்த்தத்துவம் தான் அந்த ஆன்மா. மனது இல்லாமலும் அது இருக்கும். ஆனால் அது இல்லாமல் மனது இருக்காது. அது தான் உண்மையான ‘நான்’.

நான் என்பது நான் இல்லை, எண்ணம் ஒன்றுமே நானாக இருக்கிறது.

[தொகு] அது நீ

தத் த்வம் அஸி என்னும் உபநிடத மகாவாக்கியம் ‘அது நீ’ என்று பொருள் தருகிறது. உள்முகமாக மனம் திரும்பி இதயத்தில் ஆழ்ந்து அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ, அது பிரம்மம் என்பதே. மனப்பக்குவம் அடையாத மானிடர்களைக் குறித்து சொல்லப்படும் ‘அது நீ’ என்ற உபதேசம், என்றும் அதுவே தானாய் அமர்ந்திருக்கும் பிரம்மநிலையை நோக்கி மனிதன் முன்னேறவேண்டும் என்ற நோக்குடன் சொல்லப்பட்டது. இம்மகாவாக்கியம் சாந்தோக்ய உபநிடதத்தில் 6.8.7 இல் சுவேதகேது என்ற வாலிபனுக்கும் அவன் தந்தை உத்தாலக ஆருணிக்கும் நடக்கும் சம்பாஷணையில் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுகிறது.

[தொகு] அறிவதுமில்லை, அறியப்படுவதுமில்லை

இருத்தலே ஆன்மாவின் உண்மை. ‘நான் ஆன்மாவை அறியேன்’ என்றோ ‘நான் ஆன்மாவை அறிந்தேன்’ என்றோ சொல்வது பொருந்தாது. ஏனென்றால் தன்னைத் தனக்கு அறிபடு பொருளாக்குவதனால் இரண்டு பொருள் இருப்பதாக ஆகிவிடும். இது அத்வைதத்திற்கு ஒவ்வாது.

[தொகு] அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு

ஆன்மாவைப்பற்றிய விசிஷ்டாத்வைத வேதாந்தக் கூற்று அத்வைதத்தில் சொல்லப் படுவதிலிருந்து சிறிது வித்தியாசப் படுகிறது. ஆன்மா என்பது பிரும்மத்தினுடைய ஒரு அம்சம்தான். எப்படி ஆன்மாவுக்கும் அது குடியிருக்கும் இந்த உடம்பிற்கும் ஒரு தனிப்பட்ட உறவு உள்ளதோ அதே மாதிரி உறவு பிரம்மத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ளது என்பது விசிஷ்டாத்வைத சித்தாந்தம்.

[தொகு] ஆன்மாவை விளக்கும் சில பொன்மொழிகள்

அத்ருஷ்டோ த்ரஷ்டா அச்ருத: ச்ரோதா அமதோ மந்தா அவிஞ்ஞாதோ விஞ்ஞாதா நான்ய: அதோ’ஸ்தி த்ரஷ்டா நான்ய: அதோ’ஸ்தி ச்ரோதா நான்ய: அதோ’ஸ்தி மந்தா நான்ய: அதோ’ஸ்தி விஞ்ஞாதா ஏஷ தே ஆன்மா அந்தர்யாமி அம்ருத: அத: அன்யத் ஆர்த்தம். பிருகதாரண்யக உபநிஷத் 3 – 7 – 23. பார்க்கப்படாமல் பார்க்கும்; கேட்கப்படாமல் கேட்கும்; நினைக்கப்படாமல் நினைக்கும்; அறியப்படாமல் அறியும். அதைத்தவிர வேறு பார்ப்பவரில்லை; வேறு கேட்பவரில்லை; வேறு நினைப்பவரில்லை; வேறு அறிபவரில்லை. அது தான் உனது ஆன்மா, உள்ளுறைபவன், அழியாதவன். மற்றதெல்லாம் கேடு.

ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய: பிருகதாரண்யக உபநிஷத் 2 – 4- 5. ஆன்மா தான் (அகக் கண்ணால்) பார்க்கப்பட வேண்டியது, (அகக் காதால்) கேட்கப்பட வேண்டியது, (உள்)மனதால் நினைக்கப்பட வேண்டியது, (இதய ஐக்கியத்துடன்) தியானிக்கப்பட வேண்டியது.

ஸர்வேந்த்ரிய குணாபாஸம் ஸர்வேந்த்ரிய-விவர்ஜிதம் அஸக்தம் ஸர்வபிருச்சைவ நிர்க்குணம் குணபோக்த்ரு ச. பகவத் கீதை 13-14. எல்லாப் புலன்களுடைய செய்கையினால் விளங்குவது. (ஆனால்) ஒரு புலனும் இல்லாதது. (ஒன்றையும்) பற்றாதது. ஆனால் எல்லாவற்றையும் தாங்குவது. குணங்களில்லாதது ஆனால் குணங்களை அனுபவிப்பது.

லேபிள்கள்:

பிரம்மம்

பிரம்மம் என்ற சொல் இந்து சமயத்தில் முக்காலும் உண்மையான ஒரே மெய்ப்பொருளைக் குறிக்கும். அனைத்து உபநிடதங்களும் இதைப்பற்றியே பேசுகின்றன. வடமொழியிலிருந்து உருவான இச்சொல்லின் சரியான உருப்பெயர்ப்பு: ‘ப்ரஹ்மம்’.

பிரம்மா, விஷ்ணு, சிவன் எனப்படும் முத்தெய்வங்களில் படைத்தல் செயலுக்குரியவராகக் கூறப்படும் ‘பிரம்மா’ அல்லது ‘பிரமன்’ என்ற ஆண்மைச் சொல்லுடன் அஃறிணைச் சொல்லான ‘பிரம்ம’த்தை குழப்பிக்கொள்ளக்கூடாது. ‘பிரம்மா’ வேறு, பிரம்மம் வேறு.


அடிப்படை மெய்ப்பொருள் அல்லது பரம்பொருள்

எது எது உள்ளதோ அவை யாவற்றிற்கும் பெயரோ, உருவமோ அல்லது இரண்டுமோ இருந்தே தீரும். தங்க ஆபரணங்களெல்லாம் தங்கத்தை ஆதார உண்மையாக உள்ளன. மண்ணால் செய்யப்பட்ட அவ்வளவும் மண்ணை அடிப்படை நிலையுண்மையைக் கொண்டன. திரைக்காட்சியில் தோன்றும் காட்சி அனைத்திற்கும் திரையே கடையுண்மை. அப்படியே உலகில் பெயருடனோ உருவமுடனோ காணப்படும் எல்லாவற்றிற்கும் ஆதார அடிப்படை மெய்ப்பொருள் ஒன்று உளது என்பது எல்லா உபநிடதங்களின் கூற்று. அது ‘பெயர்’ ‘உருவம்’ என்ற வரையறுப்புகளை மீறியது. அதனால் அதை ‘அது’ (வடமொழியில் ‘தத்’) என்று மட்டுமோ அல்லது ‘பிரம்மம்’ என்றோ உபநிடதங்கள் குறிக்கின்றன. ‘பிரம்மம்’ என்ற சொல் ‘வளர்தல்’ அல்லது ‘அதிகரித்தல்’ என்று பொருள்படும் ‘பிருஹ்’ என்ற வடமொழி வினைச்சொல்லிலிருந்து உருவானது.

‘ஸத்’ என்ற ஒரு சொல் போதும்

மாறுதலே இல்லாத கடையுண்மை என்பதை அடிக்கோடிடுவதற்காக அதை ‘பரப்பிரம்மம்’ என்றும் கூறுவதுண்டு. அங்கிங்கெனாதபடி எங்கும் விளங்கியதாய் இருக்கும் இப்பரம்பொருளைப் பற்றி ‘இருக்கிறது’ என்பதைத்தவிர வேறு ஒன்றும் பேசிவிடமுடியாது. வெறுமனே இருக்கும், அவ்வளவுதான். அது பேசாது, பேசவொண்ணாதது; பார்க்காது, பார்க்கவொண்ணாதது; காரணிக்காதது, காரணத்தில் அடங்காதது; காரியம் செய்யாதது; காரியத்தினால் ஏற்படாதது – இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். முக்காலத்திலும் இருப்பதனால் அதை ‘இருப்பு’ என்று பொருளுடைத்த ‘ஸத்’ என்ற ஒரே சொல்லால் வேதங்கள் சொல்லிவிடுகின்றன. ‘ஸத்’ என்றால் நிலை பெயராத உண்மை.

மெய்யுணர்வே நேர்முக அறிவு

பிரம்மத்தைப்பற்றி நாம் அறிவதாகக் கொள்வதெல்லாம் வேதங்கள் சொல்வதன் மூலமே. இவ்வறிவு ‘மறைமுக’ அறிவாகும். பிரம்மத்தைப் பற்றிய ‘நேர்முக’ அறிவை மெய்ஞ்ஞான உள்ளுணர்வு ஒன்றினாலேயே அடையமுடியும். வேறுவழியால் அடைவதல்ல அவ்வறிவு. அறிவதையெல்லாம் அறியச்செய்வதே அந்த மெய்யுணர்வுதான். அதை ஆங்கிலத்தில் ‘Consciousness’ என்றும் வடமொழியில் ‘ஜீவசைதன்யம்’ என்றும் ‘சித்’ என்றும் சொல்வர்.

மெய்யுணர்வு அறியப்படுவதில்லை

மெய்யுணர்வைத்தாண்டி வேறு ஒரு உணர்வோ அறிவோ இருக்கமுடியாது. மெய்யுணர்வுதான் அத்தனை அறிவையும் அறிகிறது. ‘மெய்யுணர்வின்மை’ என்ற அறிவை அறியவும் மெய்யுணர்வு வேண்டும். இருட்டறையில் விளக்கைப் போட்டவுடன் தெரியும் பொருட்களை மட்டுமல்லாது, ஒரு பொருளும் இல்லாதபோது ஒன்றுமில்லை என்ற வெறுமையையும் காட்டிக்கொடுப்பது ஒரே வெளிச்சம் தான். இருட்டாக இருந்தபோது இருட்டைக் காண்பித்துக் கொடுத்ததும் ஒரு வெளிச்சம் தான். அந்த வெளிச்சம் தான் நம்முள்ளிருக்கும் மெய்யுணர்வு. இதுதான் வெளிச்சம் இருக்கும்போதும் வெளிச்சத்தையே நமக்கு விளக்கிவைக்கிறது. அறியப்படும் பொருள் எதையும் நம் அறிவுக்கு விளங்கச்செய்வது நம் மெய்யுணர்வே. ஆனால் மெய்யுணர்வை நமக்கு விளங்கச் செய்வதற்கு வேறு அறியும் திறனோ கருவியோ வேண்டியதில்லை. மெய்யுணர்வு என்பது அறியப்படும் பொருள் அல்ல. எரியும் விளக்கை விளங்கச் செய்வதற்கு வேறு விளக்கு தேவையில்லை. மேலும் தனக்கு அயலான பொருளை அறியும் அறிவானது மெய்யறிவுமல்ல.

எல்லாவற்றையும் கடந்தது

இவ்வுலகனைத்தும் பிரம்மத்தின் வெளிப்பாடு தான். எல்லாவற்றிற்கும் முழு முதற்காரணம் அதுவே. விளங்கிடும் பிரம்மத்தைச் சார்ந்துதான் இவ்வவனி யாவும் விளங்குகிறது. ஆனாலும் பிரம்மத்திற்கு காரண-காரியங்கள் சொல்லப்பட வில்லை. அதனாலேயே அது உலகத்தின் இன்ப-துன்பங்களையும், நல்லது-கெட்டதுகளையும் தொடக்க-முடிவுகளையும் தாண்டிய ஒன்று எனப்படுகிறது. அது எண்ணத்திற்கும் சொல்லுக்கும் புத்திக்கும் அப்பாற்பட்டது. இப்படிச் சொல்வதால் பிரம்மம் [[புத்தம் சொல்லுவதுபோல் சூன்யம் என்றோ அறவே இல்லாத பொருளென்றோ கொள்ளலும் சரியல்ல. பிரம்மத்தை சம்பந்தப்படுத்திப் பேசப்படும் வினைதான் மறுக்கப்பட்டதே யொழிய பிரம்மத்தின் இருப்பு மறுக்கப்படவில்லை.

அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு

எல்லா உயிர்களுக்குள்ளும் உயிருக்குயிராக இருக்கும் (ஆன்மா என்று சொல்லப்படும்) மெய்யுணர்வும், எங்கும் நிறைந்து முடிந்த முடிவான உண்மைப்பொருளாக உள்ள பிரம்மமும், ஒன்றே தான் என்பது ஆதி சங்கரர் போற்றிய அத்வைத வேதாந்தத்தின் முடிவு. குடத்துள்ளிருக்கும் வெட்டவெளிக்கும், குடமே இல்லாமலிருக்கும் பரந்த வெட்டவெளிக்கும் வித்தியாசமே இல்லை. வித்தியாசம் இருப்பதாகச் சொல்லப்பட்டால் அது குடம் என்ற ஒரு செயற்கை வரம்பு, ஒன்றை சிறியது போலவும் மற்றொன்றை பெரியது போலவும் பிரித்துக்காட்டுகிறது என்பதுதான். இது அத்வைதம் சொல்கிற சித்தாந்தம்.

இராமானுஜர் போற்றிய விசிஷ்டாத்வைத வேதாந்தத்தின் முடிவு இதிலிருந்து சிறிது வேறுபடுகிறது. ஒரு வெட்டவெளியை சிறியதாகவும் மற்றொன்றை பெரியதாகவும் பிரித்துக்காட்டும் குடத்தை இல்லை என்று மறுக்கமுடியாது. ஆதலால் ஆன்மாவை பரம்பொருளின் (அ-து பிரம்மத்தின்) ஒர் அம்சம் என்றுதான் சொல்லவேண்டும் என்கிறது அந்த சித்தாந்தம்.

பிரம்மத்திற்கு ஒரு செய்கையோ மாறுதலோ கிடையாது. அது ஏதோ செய்வதுபோல் தோன்றினால் அப்பொழுது அதை ‘பரமாத்மா’ என்கிறோம். குருக்ஷேத்திரத்தில் கீதையைப்பேசும் பரமாத்மாவை கிருஷ்ணபரமாத்மா வென்றும், கைலாயத்தில் செயல்படும்போது அதை பரமேசுவரன் என்றும், வைகுண்டத்தில் செயல்படும்போது அதை ஸ்ரீமந்நாராயணன் என்றும் ஸத்யலோகத்தில் படைத்தல் தொழிலில் ஈடுபடும்போது பிரமன் என்றும் சொல்கிறோம். இவர்களெல்லாம் ஒரே பரம்பொருளின் வெளிப்பாடுகள். இவ்விதம் பரமாத்ம தத்துவத்தை (பரம்பொருளை) முதலில் சொல்லி அதனுடைய வெளிப்பாடுதான் பரமாத்மாவென்று பின்னால் சொல்வது அத்வைத வேதாந்தக் கொள்கை. மாறாக, பரமாத்மாவை அடிப்படையாக வைத்து அவருடைய தத்துவம் தான் பரமாத்ம தத்துவம் என்று சொல்வது விசிஷ்டாத்வைத வேதாந்தக் கொள்கை.

பிரம்மம் குணங்களற்றது (‘நிர்க்குணம்’) என்று அத்வைதம் சொல்கிறது. விசிஷ்டாத்வைதம் இதை மறுக்கிறது.

‘ஸத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம’

இது தைத்திரீய உபநிடத்திலிலுள்ள (தைத்திரீய உபநிஷத்) ஒர் முக்கியமான வாக்கியம். ‘பிரம்மம் என்பது உண்மை. பிரம்மம் என்பது மெய்யறிவு. பிரம்மம் என்பது வரையற்றது’. இது அத்வைத மரபில் இவ்வாக்கியத்திற்குச் சொல்லப்படும் பொருள். விசிஷ்டாத்வைத மரபில் உண்மை, அறிவு, வரையற்ற தன்மை இம்மூன்றும் பிரம்மமாகிற பரமாத்மாவின் குணங்கள் என்று கொள்ளப்படுகிறது.

இதனாலேயே பிரம்மத்தை ‘ஸச்சிதானந்தம்’ என்று சொல்வதும் பொருந்தும். அதாவது, ‘ஸத்’ (ஸத்யம் என்ற உண்மை, இருப்பைக் குறிப்பதால்), ‘சித்’ (ஞானம் என்ற மெய்யறிவைக் குறிப்பதால்), மற்றும் ‘ஆனந்தம்’ (வரையற்றது என்றவுடனே குறையற்ற ஆனந்தமும் நிறைபெறுவதால்).

சில மாதிரி மேற்கோள்கள்

யேனேதம் ஸர்வம் விஜானாதி தம் கேன விஜாநீயாத்பிருஹதாரண்யக உபநிஷத் 2 – 4 – 14 ‘எதைக்கொண்டு எல்லாம் அறியப்படுகிறதோ அதை எதைக்கொண்டு அறிவது?’

அணோரணீயாந் மஹதோ மஹீயாந்மஹாநாராயணோபநிஷத், அனுவாகம் 12 ‘அணுவுக்கணுவானது, பெரிதுக்கும் பெரிதானது’

யோ புத்தே: பரதஸ்து ஸ:” பகவத்கீதை: 3 – 43. ‘எது புத்திக்கும் அப்பாற்பட்டதோ'.

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர-தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோ’யமக்னி: / தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி”// முண்டக உபநிஷத் 2 – 2 -10. ‘அங்கு ஆதவனோ சந்திரனோ தாரகைகளோ பிரகாசிப்பதில்லை. மின்னல் கொடிகள் விளங்குவதில்லை. விளங்கிடும் அவனைச்சார்ந்து எல்லாம் விளங்குகின்றன. அவனுடைய் பிரகாசத்தால் இந்த எல்லாமே பிரகாசிக்கின்றன’.

யதோ வாசோ நிவர்த்தந்தே, அப்ராப்ய மனஸா ஸஹ” தைத்திரீயோபநிஷத்: 2 – 1 - 9 ‘(பிரம்மத்தினிடமிருந்து) அதை அடையமுடியாமல் மனதுடன் கூட சொற்கள் பின்வாங்குகின்றன’.

மகாவாக்கியங்கள்

முதன்மைக் கட்டுரை: மகாவாக்கியம்

வேதாந்த நூல்களில் நான்கு வேதங்களிலுள்ள உபநிஷத்துகளிலிருந்து பிரும்மத்தைப் பற்றிய நான்கு வாக்கியங்கள் கடைந்தெடுத்த ஸாரமாகக் கருதப்படுகின்றன. அவையாவன :

பிரஞ்ஞானம் பிரம்ம” (ஐதரேய உபநிடதம்ரிக் வேதம்) ‘மெய்யுணர்வே பிரம்மம்’

அஹம் பிரம்ம அஸ்மி” (பிருஹதாரண்யக உபநிடதம் - யஜுர் வேதம்) ‘நான் பிரம்மமாக இருக்கிறேன்’

தத் த்வம் அஸி” (சாந்தோக்ய உபநிடதம்ஸாம வேதம்) ‘அதுவாகவே நீ இருக்கிறாய்’.

அயமாத்மா பிரம்ம” (மாண்டூக்ய உபநிடதம்அதர்வ வேதம்) ‘இந்த ஆன்மா பிரம்மமே’

‘பிரம்ம’- சொற்றொடர்கள்

பிரம்மம் என்ற சொல்லிலிருந்து வடமொழியில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் சில தமிழிலும் அப்படியே நூல்களில் வழக்கில் உள்ளன. அவைகளில் முக்கியமானவை:

‘பிரம்மஞ்ஞானி’: பிரம்மத்தை நேர்முகமாகவே அறிந்தவர். இவர் பிரம்மமாகவே ஆகிறார் என்பது உபநிடத-வாக்கியம்.

‘பிரம்மஞ்ஞானம்’: பிரம்மத்தைப்பற்றிய நேர்முக அறிவு.

‘பிரம்ம-நிர்வாணம்’: பிரம்மமாகவே ஆகிவிடல்.

‘பிரம்மச்சாரி’: பிரம்மமாகிற வேதங்களை கற்பதொன்றே குறியாயிருப்பவன்.

‘பிரம்மார்ப்பண்ம்’: பிரம்மத்திற்கு அர்ப்பணம்.

‘பிரம்மானுபவம்’: பிரம்மத்தை நேர்முகமாகக்கண்ட அனுபவம்.

‘பிரம்மபாவம்’: பிரம்மமாகவே பார்க்கும் நிலை.

‘பிரம்மோபதேசம்’: பிரம்மமாகிற வேதத்தின் உயிர் மூச்சாகிய காயத்ரீ மந்திரத்தை முறையாக உபதேசித்தல்.

பிரம்ம சூத்திரம்’ : பிரம்மத்தைப்பற்றிய பொருளனைத்தும் 555 சூத்திரங்களில் உள்ளடக்கிய பிரமாண நூல்.

லேபிள்கள்:

தவம்

தவம் என்பது இந்து தொன்மவியலில் உள்ள ஒரு கருத்துரு ஆகும். ஒருவர் தன்னை வருத்தி முழுப் பக்தியுடன் இறைவனை நோக்கி தவம் செய்தால், அதற்கு இறைவன் கட்டுப்பட்டு வரம் வழங்கவேண்டும் என்பது இதன் அடிப்படை.

தவம் என்றால் மனதை அடக்குதல். மன ஆற்றலை அதிகப்படுத்துதல் என்பது அல்ல. தவம் என்றால் இந்த பிரபஞ்சமும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், உயிரற்ற பொருட்களும் உருவாக காரணமான மூல ஆற்றலை பற்றி விழிப்புணர்வு பெறுதலும் அவ்வாற்றலை வாழ்வில் பயன் படுதலுமே தவம் ஆகும்.

அந்த ஆற்றல் எங்கும் நிறைந்தே இருக்கிறது. நமக்குள்ளும் நம்மை சுற்றிலும் நிறைந்தே இருக்கிறது. அதை உணர்வதற்கு மனதை கடந்து செல்ல வேண்டும் . நாம் நுண்ணிய மனோ நிலைக்குச சென்று, பின் மனமே இல்லா நிலைக்கு அதாவது அப்பால் இருக்கும் பொருளை இப்பால் காட்டும் தூய கண்ணாடி போன்ற மனோநிலைக்கு செல்ல வேண்டும் .

கண், காது , மூக்கு , நாக்கு மற்றும் தோல் ஆகிய ஐந்து புலங்களில் ஒரு புலனின் செயல்பாட்டை குறைத்தால் மற்ற புலன்களின் ஆற்றல் அதிகமாகும் உதாரணத்திற்கு கண் பார்வை அற்றவர்களுக்கு கேட்க்கும் திறன் அதிகமாயிருப்பதைக்காணலாம் . தவம் செய்யும் பொழுது நாம் ஐந்து புலன்களின் சலனங்களை குறைத்து நுண்ணிய மனோநிலைக்கு செல்கிறோம். பின் மனமற்ற நிலைக்கு செல்லுகிறோம். (இதை வேதங்களில் மனோநாசம் என்றும் சொல்லுவார்கள்.) அப்பொழுது உள்ளுணர்வு விழிப்படைகிறது .

அங்கு நம்மிலும் நம்மைசுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கும் மூல ஆற்றலை உணர்கிறோம். எல்லாவற்றிற்கும் மூலமானது அந்த ஒரே ஆற்றல் என உணர்கிறோம். நாமும் அவ்வாற்றலே என உணர்கிறோம்.

தவத்தை கண்டிப்பாக ஒரு குருவின் உதவியுடனே கற்க வேண்டும். அவ்வாறன்றி தன்னிச்சையாகவோ நூல்களில் படித்தோ செய்யக்கூடாது . காரணம் நீங்கள் எதையாவது தவறாக செய்தால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஒருசிலர் தவறாக செய்துவிட்டு, யோகம் தவம் செய்ததால் எனக்கு இவ்வாறு ஆகிவிட்டது என்று பலரிடம் சொல்லி யோகம் தவத்தின் உன்னதம் மக்களிடம் பரவுவதில் ஒரு தடையை ஏற்படுத்தி விடுகிறார்கள். இவ்வாறு சிலர் தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் நிலை ஏற்படுவதாலேயே குருவின்றி கற்றுக்கொள்ள கூடாது என்கின்றனர்.

யோகம் யோகம் என்பது தவம் செய்ய ஏதுவான வகையில் உடலையும் உடலின் உள் அவயங்களையும் தயார் செய்யும் பயிற்சியே யோகம் ஆகும் . யோகத்தில் ஆசனம் , பிராணயாமம் முக்கியமானதாகும்.

ஆசனம் தவம் செய்ய நீண்ட நேரம் ஒரு நிலையில் அமரவேண்டும் . அவ்வாறு அமர்ந்திருக்கும்போது உடலின் எந்த இடத்திலும் உறுத்தலோ வலியோ ஏற்படக்கூடாது. அவ்வாறு உறுத்தலோ வலியோ ஏற்பட்டால் தவத்தில் முழு மனமும் லயிக்காது. தவம் செய்ய இடையூறு ஏற்படா வண்ணம் அமரும் முறையே ஆசனம் எனப்படுகிறது.

பிரணாயாமம் உடலின் மூல ஆற்றல் உடலெங்கும் 72000 நாடிகளின் வழியாக பரவுவதாக சித்தர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை மூலத்திலிருந்து மூன்றாகப் பிரிந்து, பின்பு அவை பலகிளைகளாக பிரிந்து ஆற்றலை உடலெங்கும் எடுத்துச் செல்கிறது . அந்த முக்கிய மூன்று நாடிகளை இடகலை, பிங்கலை, சுழுமுனை (இவற்றை சந்திர கலை, சூரிய கலை, சுசும்னா ) என்பர். இவை முதுகு தண்டில் முறையே இடது, வலது, நடு மையத்தில் கீழிருந்து மேலாக செல்கிறது. சாதாரணமாக நாம் முச்சு விடும்போது இடது நாசித்துவாரத்தின் மூலமோ அல்லது வலது நாசித்துவாரத்தின் மூலோமோ தான் காற்று செல்லும். இடது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் இடகலை நாடியின் மூலமும், வலது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் பிங்கலை நாடியின் மூலமும், இரண்டு நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் சுழுமுனை நாடி வழியாகவும் உடலில் பரவுகிறது. ஆற்றல் சுழுமுனை நாடி வழியாக பரவும் போதுதான் நாளமில்லா சுரப்பிகள் நன்முறையில் செயல்பட்டு உடலில் (cosmic energy) வான் காந்த ஆற்றல் கிரகிக்கப் படுகிறது. இதற்காகவே நாடிசுத்தி, தண்டுவட சுத்தி ஆகிய பிராணாயாம பயிற்சிகள் அவசியமாகிறது.

லேபிள்கள்: